வீட்டின் பூட்டை உடைத்து 7 சரவன் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து 7 சரவன் நகை திருட்டு

Added : ஜன 08, 2020

திண்டிவனம்:திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம், காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோதீபன், 38; இவரது மனைவி சவுமியா. மனோதீபன் சென்னை, கிண்டி அருகே உள்ள மடுவாங்கரையில் பவுடர் கம்பெனி வைத்துள்ளார். இவரது மனைவி சவுமியா கிண்டியில் உள்ள சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வருகிறார்.இருவரும் சென்னையில் பணிபுரிந்து வருவதால் திண்டிவனத்தில் உள்ள வீட்டில், சவுமியாவின் தாயார் அடிக்கடி வந்து தங்குவார்.
இதேபோன்று, சவுமியாவின் தாயார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தங்கிவிட்டு கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, சென்னைக்குச் சென்று விட்டார்.அன்றைய தினம் இரவு, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்து சவுமியா கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X