சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கவுன்சில் தலைவர் பதவிக்கு குதிரை பேரம்; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலக்கம்: தி.மு.க.,கவுனசிலர்களுக்கு நெருக்கடி

Added : ஜன 08, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட கவுன்சில் தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்ற, தி.மு.க., - கூட்டணியில் இருந்து ஒரு கவுன்சிலரை அழைத்து வருவோருக்கு தான் வாய்ப்பு என அ.தி.மு.க., கைகழுவி விட்டதால், அக்கட்சி கவுன்சிலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

காங்.,கவுன்சிலர் ஒருவரை இழுக்க ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பேரம் நடப்பதாக தெரிவிக்கின்றனர்.

மாவட்ட கவுன்சிலர் பதவி தேர்தல் முடிவில் அ.தி.மு.க.,- 8 இடங்களிலும், தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., 5, காங்., - 2, ஐ.ஜே.க., - 1 இடம் பிடித்து, இரு கட்சிகளும் சமபலத்தில் வென்றுள்ளன. ஜன.,11 ல் மாவட்ட கவுன்சில் தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் மோதல் ஏற்படும் நிலை உள்ளது.

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலக்கம்: அ.தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சில் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய, அக்கட்சி விரும்புகிறது. ஆனால், தலைவர் பதவிக்கு வர விரும்பும் கவுன்சிலர் தான், எதிர்கட்சி கூட்டணியில் உள்ள ஒரு கவுன்சிலரை அழைத்து வரவேண்டும் என கட்சி கைகழுவி விட்டது. இதனால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பண பலம் படைத்த கவுன்சிலர் சிலர் காங்., கட்சியில் இருந்து தேர்வான ஒரு கவுன்சிலரை இழுத்து வர ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பேரம் நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

தி.மு.க.,விற்கு நெருக்கடி: அதேநேரம், மாவட்ட கவுன்சில் தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் பணபலம் படைத்த ஒரு கவுன்சிலரை தலைவராக்க திட்டமிட்டு, அ.தி.மு.க.,வில்., தேர்தலில் செலவழித்து ஓய்ந்த கவுன்சிலர் ஒருவரை இழுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட கவுன்சில் தலைவர் பதவிக்கான 'குதிரை ரேஸில்' எந்த குதிரை வெல்லும் என்பதை ஜன.,11 ல் பார்க்கலாம். தேர்தலில் சமபலம் வந்தால் குலுக்கல்: தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரு கூட்டணி கட்சிகளும் சமபலத்தில் வென்றுள்ளன. மறைமுக தேர்தலில் சமபலம் பெற்றால் குலுக்கல் முறையில் தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்படுவர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X