சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பு மோதல்

Added : ஜன 08, 2020
Advertisement

அவலுார்பேட்டை:மேல்மலையனுாரில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுாரைச் சேர்ந்தவர் அம்பிகாபதி, 52; இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி, ஜன்னல் சன்சைடு கட்டும் பணியில் கடந்த 3ம் தேதி ஈடுபட்டிருந்தார். தெரு பக்கமாக சன்சைடு கட்டினால், இடையூறாக இருக்கும் என, அதே ஊரை சேர்ந்த பழனிவேல், 60; என்பவர், அத்துமீறி நுழைந்து சன்சைடை சேதப்படுத்தினார். இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரரும் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், பழனிவேல், அவரது மகன்கள் செந்தில், சுரேஷ்குமார், 34; மற்றும் மனைவி விஜயா, அம்பிகாபதி, உறவினர்கள் செல்வம், அவரது மனைவி மலர் ஆகிய ஏழு பேர் மீது வளத்தி போலீசார், வழக்குப்பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X