திஹாரில் தூக்கு தண்டனை ஒத்திகை

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (8)
Advertisement
திஹாரில் தூக்கு தண்டனை ஒத்திகை

புதுடில்லி: 'நிர்பயா வழக்கு, குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என, டில்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் மூன்று பேர், திஹார் சிறையின் சிறை எண் - 2லும், ஒருவர் மட்டும் சிறை எண் - 4லிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும், வரும், 22ம் தேதியன்று, சிறை எண் - 2ல் துாக்கிலிடப்படுவர்.

இந்நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை இன்று திஹார் சிறையில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உ.பி.மாநிலம் மீரட்டை சேர்ந்த சிறை காவலர் இதற்கான ஒத்திகையை நடத்திட உள்ளார்.

அப்போது காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், கலெக்டர் வர இயவில்லை என்றால், துணை கலெக்டர், அரசு மருத்துவர் குழுவினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202013:30:52 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதனால் தான் குற்றவாளிகள் பல்கி பெருகிவிட்டார்கள் , 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் , கொடூரமான குற்றவாளிகள் பலர் தண்டனை பெற்றுள்ள நாட்டில் தூக்குபோடுவதற்கு ஒத்திகை பார்ப்பது மகா கேவலம் , நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விட்டது. தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட அடுத்த ஒரு மாதத்தில் தூக்கில் போட்டுவிட வேண்டும் , இதையெல்லாம் ஒரு விழாவாக நாள் குறித்து செய்துகொண்டிருக்க கூடாது , இபப்டி செய்வதால் அடுத்து சீராய்வு மனு , மீண்டும் கருணை மனு என்று இழுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
08-ஜன-202010:46:55 IST Report Abuse
Ramesh Sundram அப்படியே இந்த ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்த பட்ட கொலைகாரர்களையும் தூக்கில் போடுங்கள் எங்கள் வரிப்பணத்தில் சிறையில் குளுகுளு மற்றும் கிளுகிளு செல் போன் சகிதம் உல்லாச வாழ்கை வாழ்கின்றனர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கணவன் மனைவி சந்திப்பிற்கு கூட போலீஸ் காவல் இவர்கள் தமிழர்கள் என்று குரல் கொடுக்கும் போராளிகள் அதே ராஜிவ் காந்தி அவர்களுடன் இறந்த அப்பாவி மக்களே அந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ ஏன் இலங்கையில் இருந்து கூட வந்தவர்களா இல்லை எல்லாம் அப்பாவி தமிழர்களே நிறைய அப்பாவிகள் இன்னும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவத்துக்காக கை கால்கள் இழந்து ஊனத்துடன் வாழ்கிறார்கள்
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-ஜன-202013:16:07 IST Report Abuse
Sanny அவங்கள தூக்கில்போட இன்னும் வெளியில் உள்ள குற்றவாளிகள் உள்ள வரணுமாம், அதுதான் வெயிட்டிங். புரியுதா?...
Rate this:
Share this comment
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
08-ஜன-202015:13:20 IST Report Abuse
Ramesh Sundramபரவாயில்லை வெளியில் உள்ள குற்றவாளிகள் யார் என்று சொல்லுங்கள் திரு SANNY அவர்களே...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-ஜன-202006:01:12 IST Report Abuse
Sanny சிபிஐ SP ரகோத்தமன், Eye er நிகழ்ச்சிநடாத்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சித்தன்னர் இவர்களிடம் கேளுங்க விரிவாக சொல்லுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
08-ஜன-202010:30:23 IST Report Abuse
வல்வில் ஓரி ஒத்திகை பார்க்கிறதுக்கு ஆள் கிடைக்கலீன்னா கோல்ஹாப்பூர்க்காரனை கூட்டிகிட்டு போங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X