தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்றவர்கள் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்றவர்கள் கைது

Added : ஜன 08, 2020

விழுப்புரம்:அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் போலீசார் அங்குள்ள கடைத்தெருவில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஐய்யனார், 62; என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் வழக்குப்பதிந்து ஐய்யனாரை போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை சேர்ந்த ஜனார்த்தனன், 54; என்பவரை ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X