பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன குழாய்களில் அடைப்பை தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிக்க அறிவுரை

Added : ஜன 08, 2020
Advertisement
 நுண்ணீர் பாசன குழாய்களில் அடைப்பை தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிக்க அறிவுரை

உடுமலை:காய்கறி சாகுபடிக்கான சொட்டு மற்றும் நுண்ணீர் பாசன குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை பகுதியில், காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்க, சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் முக்கிய காரணமாக உள்ளது.குறைந்த நீர் தேவை, களைகள் கட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணங்களால், இத்தொழில்நுட்பத்தை பின்பற்ற விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இப்பாசன முறையில், குழாய்களில் அடைப்பு ஏற்படுவது; உடைப்பு போன்ற பிரச்னைகளால், செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க, கோவை வேளாண் பல்கலை., சார்பில், பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, நீரில் காரத்தன்மை அதிகமிருந்து, பக்கக்குழாயை சுத்தம் செய்யாவிட்டால், நுனி அடைப்பை எடுத்து விடும்போது வெள்ளை நிறக்கலவை வெளியேறும். இதை கட்டுப்படுத்த, நுனியில் திறந்துவிட்டு பக்கக்குழாய்களை 15 நாட்களுக்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். பக்கக்குழாய்களிலிருந்து மிகக் குறைவாகவோ அல்லது அதிமாகவோ நீர் பாய்வது தெரிந்தால், மணல் திரைவடிகட்டியை சுத்தம் செய்து, குழாய் நுனிக்கு மூடி இட்டு அடைக்க வேண்டும்.நீரில் இரும்பு பொருட்கள் இருக்கும் போது, பக்கக் குழாயின் நுனிமூடியைத் திறக்கும்போது எண்ணெய் கலந்த பிசின் போன்ற பொருள் வெளிவரும். எனவே, பக்கக்குழாயினை தண்ணீரால், சுத்தம் செய்வதுடன், ரசாயனம் கொண்டு நேர்த்தி செய்வது அவசியமாகும்.குழாயில் வெளியேற்றப்படும் நீரின் அழுத்தம் குறையும் போது, திறந்த பிரதானக் குழாயில் கசிவு அல்லது கிணற்றில் நீர் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அப்போது, திறப்பினை சரிசெய்து கசிவினைத் தடுப்பதுடன், கிணறின் நீரளவுக்கு ஏற்றவாறு குழாயினை இறக்கி வைப்பது அவசியமாகும்.இவ்வாறு, சொட்டு நீர் பாசன கட்டமைப்பு, நீரில் கரையும் உரங்களை செலுத்தும் அமைப்புகளை பராமரித்ததால், விவசாயிகளுக்கு செலவு குறையும்.இவ்வாறு, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X