பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வாக்காளர் தினம் கல்லுாரிகளில் ஓவியப்போட்டி

Added : ஜன 08, 2020
Advertisement

உடுமலை:'வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு' என்ற தலைப்பில் கல்லுாரிகளில் ஓவியப்போட்டி நடந்தது.தேசிய வாக்காளார் தினத்தை முன்னிட்டு, தேர்தல் கமிஷன், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக 'வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு' என்ற தலைப்பில் அனைத்து கல்லூரிகளிலும், நேற்று ஓவியப்போட்டி நடந்தது. உடுமலையில், ஜி.வி.ஜி., கல்லுாரி, அரசு கல்லுாரி உள்ளிட்ட கல்லுாரிகளில், ஓவியப் போட்டிகள் நடந்தன.ஓவியப் போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள், சென்னை தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டு, அங்கு தேர்வு செய்யப்படும் ஓவியங்களுக்கு, வரும், 25ம் தேதி, சென்னையில் நடக்கும், மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின விழாவில், சான்றிதழ்கள் வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X