பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

உடுமலை:ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகளின் விவரத்தை, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பதிவு செய்ய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.பொங்கலுார் அருகிலுள்ள அலகுமலையில், மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா, வரும் பிப்., 2ல் நடக்கிது. அதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. காளைகள் விவரங்களை, தரவு தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளையின் விவரம், தரவு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த காளைகள் மட்டுமே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும். எனவே, திருப்பூர் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர், அருகில் உள்ள, கால்நடை மருந்தகங்களில் பதிவு செய்ய வேண்டும்.வரும், 15ம் தேதிக்குள், காளைகள் முழு விவரம் மற்றும் ஆதார் நகலுடன் சென்று, கால்நடை மருந்தகங்களில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X