பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்போடு முடங்கிய அரசு கொள்முதல் மையங்கள்: கொப்பரை உற்பத்தியாளர்கள் விரக்தி

Added : ஜன 08, 2020
Advertisement
 அறிவிப்போடு முடங்கிய அரசு கொள்முதல் மையங்கள்: கொப்பரை உற்பத்தியாளர்கள் விரக்தி

உடுமலை:கொப்பரை உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மையங்களில், இந்தாண்டாவது கொள்முதலை துவக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், ஒரு லட்சம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காயை, உலர் களங்களில், கொப்பரையாக மதிப்பு கூட்டி, காங்கயத்திலுள்ள கொள்முதல் மையம் மற்றும் எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.கொப்பரை விலை நிலவரத்தின்படியே தேங்காய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்தாண்டு, தேங்காய், கொப்பரை விலை கடுமையாக சரிந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, ஆதார விலையை அதிகரித்து, அரசு கொள்முதல் மையங்களில், கொப்பரை கொள்முதலை துவக்க விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி, ஜூன், 2019 ல், கொப்பரைக்கான ஆதார விலையாக, 95.21 ரூபாயாக நிர்ணயித்து, நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும்,' என அரசு அறிவித்தது.ஆனால், கடந்தாண்டு முழுவதும், அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்படாமல், தென்னை விவசாயிகளுக்கு, அதிருப்தியையே அரசு வழங்கியது. உடுமலை பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களங்களில், நாள் ஒன்றுக்கு, நுாறு டன் வரை கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக போதிய விலை கிடைக்காதது, தொடர் மழையால் உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்னைகளால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளை ஈ தாக்குதல் உட்பட பிரச்னைகளால், தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. தேங்காய், கொப்பரைக்கு நிலையில்லாத விலை நிலவரம் இருப்பதால், விவசாயிகள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, இந்தாண்டாவது, அரசு அறிவித்தபடி, உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலுார், காங்கயம் விற்பனைக்கூடங்களில் அரசு கொள்முதல் மையங்களை துவக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X