நகரின் மையத்தில் அழகுபடுத்தப்படாத ரவுண்டானா: அகற்றப்படாத பழைய பொருட்களால் அவலம்

Added : ஜன 08, 2020
Advertisement
 நகரின் மையத்தில் அழகுபடுத்தப்படாத ரவுண்டானா: அகற்றப்படாத பழைய பொருட்களால் அவலம்

உடுமலை:உடுமலையில், ரவுண்டானா அமைத்தும், சிக்னல் கம்பங்கள், தடுப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.உடுமலையில், பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு மற்றும் ராஜேந்திரா ரோடு சந்திப்பில், 2 கோடி ரூபாய் செலவில், சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், நகரின் மத்தியிலுள்ள ரவுண்டானா மற்றும் ரோடு மையத்தடுப்புகளில் ஏற்கெனவே, இருந்த சிக்னல் கம்பங்கள், இரும்பு தடுப்புகள் மற்றும் மின் கம்பங்கள், வயர்கள் அகற்றப்படாமல் உள்ளது.மேலும், ரவுண்டானாவில், சுற்றிலும் தடுப்பு கம்பிகள் அமைக்காமலும், புல் பரப்பு, அழகுக்கான மலர்ச்செடிகள் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், ரவுண்டானா மற்றும் மையத்தடுப்புகள் அலங்கோலமாக உள்ளது.ராஜேந்திரா ரோட்டிலுள்ள பொன்விழா ஸ்துாபியை மறைத்து, சிக்னல் கம்பம் உள்ளது. மேலும், ரவுண்டானாவில் சுற்றிலும் இரும்பு தடுப்புகள் இல்லாததால், பலர் உள்ளே சென்று வருகின்றனர். மேலும், ரோட்டின் இரு புறமும், அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் மற்றும் நடை பாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.எனவே, சிக்னல் இல்லாத ரவுண்டானாவிலுள்ள, சிக்னல் கம்பங்கள், உடைந்து காணப்படும் இரும்பு தடுப்புகள் மற்றும் பல இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கிக்கொண்டிருக்கும் வயர்கள், கம்பிகளை அகற்ற வேண்டும்.ரவுண்டானா மற்றும் மையத்தடுப்புகளில், புல்வெளி மற்றும் மலர்ச்செடிகள் வைத்து அழகுபடுத்த, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X