சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி காங்., அலுவலகத்தில் அடிதடி: கார்த்தி எம்.பி., முன்பு மோதல்

Added : ஜன 08, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அலுவலகத்தில் கார்த்திஎம்.பி., முன்னே, கட்சியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது

டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்குஎதிர்ப்பு தெரிவித்து, காரைக்குடி அழகப்பா கல்லுாரி முன்பு காங்.,எம்.பி., கார்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்து,கார்த்தி கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அவரைதொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரமும் வந்தார். இதனைக்கண்ட,நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் கட்சிக்கு துரோகம்செய்தவர் கட்சி அலுவலகத்திற்குள் எப்படி வரலாம். கட்சிக்குதொண்டர்கள் முக்கியம் இல்லையா. என ஆத்திரத்தில் வாக்குவாதம்செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரத்தின்மகன் ராஜீவ், நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பனை தாக்கமுற்பட்டதால், மோதலாக மாறியது. அவர்களை தடுத்து நிறுத்தியகார்த்தி இப்பிரச்னை சம்மந்தமாக யாரும் சண்டையிட்டு கொள்ளக் கூடாது. காங்கிரஸ் கட்சி ஒரு கடல் போன்றது. எனக்குஎதிராக செயல்பட்டவர்களே இப்போது என்னுடன் தான்இருக்கிறார்கள். இது சம்மந்தமாக கட்சி மேலிடம் தான் முடிவுசெய்யும் என்று சமாதானம் செய்தார்.

எம்.எல்.ஏ., சுந்தரத்திடம் கேட்டபோது;கட்சி குறித்து நாங்கள் பேசிக்கொண்டு தான் இருந்தோம். வேறு சண்டை ஏதும் இல்லை. எங்கள் கட்சி குறித்து நாங்கள்பேசிக்கொள்ள கூடாதா? என்றார்.பாண்டி மெய்யப்பன் கூறுகையில்;கட்சி பிரச்னை சம்மந்தமாக எம்.பி.,யிடம்பேசிக் கொண்டிருந்தோம். தலைவர் வரவும் பேசிக்கொள்ளலாம் என்றுகூறினார், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X