சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சி மருந்து குடித்த பெண் பலி

Added : ஜன 08, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து பெண்தற்கொலை செய்து கொண்டார்.
வரஞ்சரம் அடுத்த அசகளத்துாரைச் சேர்ந்தவர் மனோகரன் மகள் அன்பரசி, 25; இவருக்கும் வாழப்பாடியைச் சேர்ந்த பழனி மகன் முருகன் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பின்னர் விவாகரத்து பெற்ற அன்பரசி, தற்போது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இந்நிலையில் கடந்த 2ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X