பொது செய்தி

தமிழ்நாடு

உணவில் கலப்படம் செய்தால் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

Added : ஜன 08, 2020
Advertisement

உடுமலை:உணவுப்பொருள் பாதுகாப்பு துறை, விதிகளை மீறி, உணவில் கலப்படம், தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறையில், 12 லட்சம் ரூபாய்க்கு கீழ், உணவு வணிகம் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தை முறையாக கடை பிடிக்க வேண்டும்.சட்ட விதிகளை மீறும், உற்பத்தியாளர்கள் மற்றும் கடை களில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நேரடி ஆய்வு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். செலுத்தாதவர்கள் பதிவு சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்படு, உணவு வணிகம் செய்வது நிறுத்தி வைக்கப்படும்.சிறு, குறு தயாரிப்பாளர்களுக்கு, முதல் முறை குற்றத்திற்கான அபராதத்தொகையாக, 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை குற்றத்திற்கான அபராதத்தொகை, 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது முறை குற்றத்திற்கான அபராதத்தொகை, 10 ஆயிரமும் வசூலிக்கப்படும்.மூன்று முறைக்கு மேல் அதே குற்றத்தில் ஈடுபடும் விற்பனைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதே போல், சிறு மளிகைக்கடைகள், நடமாடும் உணவுக்கடைகள், தள்ளுவண்டி கடைகளுக்கு, ஆயிரம் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.நாள் ஒன்றுக்கு, 500 லிட்டருக்குள் பால் விற்பனை செய்பவர்களுக்கு, ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாயும், இறைச்சிக்கடைகளுக்கு, 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.உணவு பொருட்களின் கலப்படம், கலப்பட டீத்துாள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமி கலந்த உணவுப் பொருட்கள், தரமற்ற உணவு, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்ற புகார்களுக்கு, 94440 42322 என்ற 'வாட்ஸ்-ஆப்' எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X