பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் டிவைடர் பகுதியில் விபத்து: போலீசார் நடவடிக்கை அவசியம்

Added : ஜன 08, 2020
Advertisement
 நெடுஞ்சாலையில் டிவைடர் பகுதியில் விபத்து: போலீசார் நடவடிக்கை அவசியம்

மடத்துக்குளம்:தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டிவைடரில் உள்ள தகரம் மறைப்பதால், விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தொடங்கி நரசிங்காபுரம் வரையில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளன. இரண்டு பக்கங்களிலும் பலநுாறு மக்கள் வசிக்கின்றனர்.ரோட்டின் ஒரு பக்கமிருந்து அடுத்த பக்கம் வந்து திரும்பும் தேவை மக்களுக்கு அதிகம் உள்ளது. இந்த, பகுதியில் பல விபத்துக்கள் நடந்ததால், வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஆனாலும், வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதைத்தவிர்க்க, நால்ரோடு அருகில், கே.டி.எல்., அரசு மேல்நிலை பள்ளி முன்பு, கிருஷ்ணாபுரம் வாய்க்கால் அருகில், நரசிங்காபுரம் அரசு நடுநிலைப்பள்ளி முன்புறம் டிவைடர்கள் வைத்து, வேகக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தியுள்ளனர்.இந்த, டிவைடர்களில், 70 சதவீதம் தகரம் பொருத்தி மறைக்கப்பட்டு, அதில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால், ரோடு முழுவதும், டிரைவர்களின் பார்வைக்கு தெரிவதில்லை.தகரத்தின் மறு பக்கம் நிற்கும் டூ - வீலர்கள், ஆட்டோ மற்றும் சிறிய வாகனங்கள், எதிரில் வரும் வாகனத்தின் டிரைவர்களுக்கு தெரியாத காரணத்தால், டிவைடர் பகுதியில் எந்த வாகனமும் இல்லை என நினைத்து, வேகமாக கடந்து செல்லும் போது விபத்துக்கள் நடக்கிறது.நேற்று காலை, 9:00 மணிக்கு, டூ - வீலரில் வந்தவர் கிருஷ்ணாபுரம் டிவைடரை கடக்க முயன்ற போது, எதிரில் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதற்கு மேற்குறிப்பிட்ட காரணம் தான் அடிப்படையாக இருந்தது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இரும்பில் செய்யப்படும் டிவைடர்களில் தகர சீட் பொருத்தி மறைக்காமல், சீரான இடைவெளியில் இரும்பு ஆங்கிள் அல்லது கம்பிவலை அமைக்கலாம். 'இதனால், டிவைடர் பகுதி முழுவதும் டிரைவர்களின் பார்வைக்குத்தெரியும். எதிரில் வாகனம் உள்ளதை உணர்ந்து, வேகம் குறைத்து செல்ல முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X