பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை கவனிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்புவனம்:தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையாலும்,ஆறுகளில் நீர்வரத்து காரணமாகவும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் குழந்தைகளை கவனமுடன் பார்த்து கொள்ளஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கண்மாய், ஊரணிஉள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பிஉள்ளது. சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பிஉள்ளது.மேலும் வைகைஆற்றில் பாசனத்திற்காக இருமுறை தண்ணீர் திறக்கப் பட்டதால் ஆற்றை ஒட்டியுள்ள கிராம கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. கண்மாய், ஆறுகளில் மணல் திருட்டு காரணமாக மெகா பள்ளங்கள் உருவாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகாரணமாக கண்மாய்கள் பலவும் ஆழப் படுத்தப் பட்டு உள்ளன. தண்ணீர்உள்ளதால் பள்ளங்கள் இருப்பது தெரியவாய்ப்பில்லை.தொடர் விடுமுறை அதிகம் வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்து கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே வன்னிகோட்டை காலனி, கச்சநத்தம் ஆகிய கிராமங்களில் நீர் நிலைகளில் தவறி விழுந்து இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வர உள்ளது. எனவேபெற்றோர்கள் தங்கள்குழந்தைகளை நீர் நிலைகளில் விளையாடவோ, மீன் பிடிக்கவோ,கால்நடைகளை குளிப்பாட்டவோ அனுப்ப வேண்டாம்.என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X