காட்சிப்பொருளான பாலூட்டும் அறை: வால்பாறையில் தாய்மார்கள் தவிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement
 காட்சிப்பொருளான பாலூட்டும் அறை: வால்பாறையில் தாய்மார்கள் தவிப்பு

வால்பாறை:பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறைக்கு செல்லும் வழித்தடம் மறைக்கப்பட்டுள்ளதால், தாய்மார்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெ., இருந்த போது, வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டும் வகையில் அறை அமைக்கப்பட்டது. இந்த அறையை தாய்மார்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, வால்பாறைக்கு வரும் எஸ்டேட் தொழிலாளர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் இந்த அறையை பயன்படுத்தி வந்தனர்.அறையை பராமரிக்கும் பணியை வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் செய்துவருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறைக்கு செல்லும் வழி, கடந்த இரண்டு மாதங்களாகவே மூடப்பட்டுள்ளது. குறிப்பாக, 'ஜெ.,' மறைவுக்கு பின், தாய்மார்கள் பாலுாட்டும் அறை பராமரிக்க அதிகாரிகளும் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், தாய்மார்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் துர்நாற்றம் வீசி, மக்கள் நிற்க முடியாத நிலையில் உள்ளது. இங்கு, அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறை பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.இதனால், யாரும் இதை பயன்படுத்துவதில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், குழந்தைகளுக்கு பாலுாட்ட வரும் தாய்மார்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். முன்னாள் முதல்வர் கொண்டு வந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பாலுாட்டும் அறையை மீண்டும் அழகுபடுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X