பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: சுகாதார நிலையத்தில் சிகிச்சை

Added : ஜன 08, 2020
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவிந்தாபுரத்தில், வீட்டில் பிரசவமான தாய், சேய் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மனைவி பத்மா, 27. இவருக்கு நேற்று முன் தினம் இரவு, 12:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, புறப்பட தயாரான போது, ஆம்புலன்சில் பிரசவம் நடந்ததாக தகவல் பரவியது. அதன்பின், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்காக தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர்.ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சமீதா கூறியதாவது:பத்மா என்ற கர்ப்பிணிக்கு இரண்டாவது பிரசவம், ஜன. 18 தேதியன்று குழந்தை பிறக்கும் என கூறப்பட்டது. ஆனால், இரண்டாவது பிரசவம் என்பதால், குறித்த தேதிக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி நேற்று முன் தினம் கோவிந்தாபுரம் வீட்டிலே யே பத்மாவிற்கு வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது.அதன்பின், ஆம்புலன்சில் தாய், சேய் இருவரையும் அழைத்து வந்து, மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு வார்டில் சேர்க்கப்பட்டு, நஞ்சுகொடி அகற்றப்பட்டது. தாய், சேய் நலமாக உள்ளனர்.ஆம்புலன்சில் குழந்தை பிரசவமாகவில்லை. வீட்டிலேயே குழந்தை வெளியே வந்துவிட்டது. நஞ்சுகொடி அகற்ற ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X