பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தை அகலப்படுத்தணும் பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : ஜன 08, 2020
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள அமராவதி பாலத்தை அகலப்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் அருகே மைவாடி - ஜோத்தம்பட்டிக்கு இடைப்பட்ட பகுதியில், அமராவதி கிளை வாய்க்கால் மீது குறுகிய பாலம் உள்ளது. உடுமலை - கணியூர் வழித்தடத்தில் உள்ள இந்த பாலம் அதிக பயன்பாடு மிக்கதாக உள்ளது.இந்தப்பகுதியில் செயல்படும், பல தொழிற்சாலைகள் மற்றும் விளைநிலங்கள் சென்று திரும்பும் வாகனங்கள் பாலத்தை கடந்து செல்கின்றன.பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதித்தால், இது மாற்று வழித்தடமாக பயன்படுகிறது. டவுன் பஸ்களும் கடக்கின்றன. அதிக பயன்பாடு உள்ள இங்கு குறுகிய பாலம் உள்ளதால், சிரமம் ஏற்படுகிறது. இதை அகலப்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X