பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணக்கு காட்டணும்!செலவு விபரம் தாக்கல் செய்ய அழைப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செலவு கணக்கு விபரங்களை, பிப்., 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென, அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த, 27 மற்றும் 30ம் தேதி என, இரண்டு கட்டங்களாக நடந்தது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய நான்கு ஒன்றியங்கள் உள்ளன. நான்கு ஒன்றியங்களில், 118 ஊராட்சிகள் உள்ளன.இவற்றில், உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, 1,889; ஊராட்சி தலைவர் பதவிக்கு, 433; ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 213; மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்கு சின்னங்கள் கிடைத்ததும், சுயேட்சை மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். காணுமிடமெல்லாம் பேனர், சுவரொட்டி ஒட்டியும், வாகனங்களில் சென்றும் பிரசாரத்தில் கலக்கினர். வேட்பாளர்கள் பிரசாரம் செய்வது, தேர்தல் பணியாட்களுக்கு செலவு செய்வது என, தேர்தலுக்கு செலவு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு, ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு, 9,000 ரூபாய்; ஊராட்சி தலைவர் பதவிக்கு, 34 ஆயிரம்; ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு, 85 ஆயிரம்; மாவட்டக்குழு கவுன்சிலர் பதவிக்கு, 1.7 லட்சம் ரூபாய், தேர்தல் செலவு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், வசதியான வேட்பாளர்கள் தங்களுடன் ஓட்டு சேகரிக்க வருவோருக்கு, டீ, 'சரக்கு', பிரியாணி வாங்கித்தருவதற்கே, லட்சக்கணக்கில் செலவு செய்தனர். ஒன்றியக்குழு, மாவட்டக்குழு கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், பல லட்சங்களை கரைத்துள்ளனர்.இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள், வேட்பாளர்கள், தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளதால், வேட்பாளர்கள் தாமதமின்றி செலவு கணக்கு தாக்கல் செய்ய, அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர். இதனால், அனைவரும் 'கணக்கு' காட்ட ஆவணங்கள் தயார் செய்கின்றனர்.மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:ஒன்றியக்குழு கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டவர்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில், உரிய படிவம் பெற்று, தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.மாவட்டக்குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு, ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.தற்போது, தேர்தலில் வென்றவர்கள் கணக்கு தாக்கல் செய்து வருகின்றனர். வெற்றி பெறாதவர்கள் செலவு கணக்கு தாக்கல் செய்வதில்லை. படிவத்தை பூர்த்தி செய்து, வேட்பாளர்கள் தேர்தலுக்கு செய்த செலவுகள் குறித்து, உரிய ரசீதுகளுடன், பிப்., 1ம் தேதிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 'தகுதி நீக்கத்துக்கு உரிய வேட்பாளர்கள்' என்ற தலைப்பில் பட்டியல் தயார் செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட முடியாது.இவ்வாறு, தெரிவித்தனர்- நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X