சீரமைக்கப்படாத நகராட்சி மைதானம்: விளையாட்டு வீரர்கள் கவலை

Added : ஜன 08, 2020
Advertisement
 சீரமைக்கப்படாத நகராட்சி மைதானம்: விளையாட்டு வீரர்கள் கவலை

வால்பாறை:நகராட்சி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில், நகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால், விளையாட்டு மைதானம் புதர் சூழ்ந்து காணப்படுவதோடு, வீடு மற்றும் கடைகளிலிருந்து வெளியாகும் சாக்கடை கழிவு நீர், விளையாட்டு மைதானத்தில் சங்கமிக்கிறது.இதனால், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்டேடியம், பயன்பாடின்றி காட்சிப்பொருளாக மாறி வருகிறது. பள்ளி மாணவர்களும், விளையாட்டு வீரர்களும் மைதானத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.இதனிடையே, கடந்த மாதம் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஒன்றிணைந்து, அனைத்துக்கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டினர்.ஆனால், இன்று வரை விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X