பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை

Added : ஜன 08, 2020
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 80 கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம்தோறும் செவ்வாய் கிழமையன்று கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நல்லட்டிபாளையம் மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து, 80 கர்ப்பிணிகள் நேற்று வந்தனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன.பரிசோதனைக்கு வந்த பெண்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.முத்துலட்சமி ரெட்டி உதவித்தொகை, 18 ஆயிரம் ரூபாய் பிரித்து வழங்கப்படுகிறது. அதில் முதல்கட்டமாக நான்காயிரம் ரூபாய் செலவில் மகப்பேறு சத்துணவு பெட்டகம் வழங்கப்படுகிறது. மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரையிலும், இரண்டாயிரம் ரூபாயும், ஐந்து மாதம் முதல் ஏழு மாதம் வரையிலும் இரண்டாயிரம் ரூபாயும் இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது.குழந்தை பிறந்த பின், தடுப்பூசி போடுவதற்காக வரும்போது மீதி தொகையை ஒன்பது மாதங்கள் வரை பிரித்து வழங்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தும், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தும் வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X