பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா பந்த்: மார்க்கெட் நேற்றே 'லீவு'

Added : ஜன 08, 2020
Advertisement
 கேரளா பந்த்: மார்க்கெட் நேற்றே 'லீவு'

கிணத்துக்கடவு:நாடு முழுவதும் இன்று, (8ம் தேதி) வேலைநிறுத்தம் என அறிவிக்கப்பட்டதால், கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் இருந்து, கேரளா மாநிலத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபடும். இதை அறிந்த, தினசரி மார்க்கெட் கமிஷன் மண்டி கடைக்காரர்கள் விவசாயிகளிடம் காய்கறிகளை கொண்டு வரவேண்டாம், விடுமுறை என அறிவித்தனர். இதனால், தினசரி மார்க்கெட்டிற்கு, நேற்றே விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வரவில்லை. இதனால், மார்க்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. தினசரி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளில், 90 சதவீதம் கேரளா வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து செல்கின்றனர். இதனால், கேரளாவில் பந்த் அறிவிக்கப்பட்டதால், கேரளா வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வரமாட்டார்கள் என்பதால், தினசரி மார்க்கெட்டிற்கு நேற்றே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X