பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் தலைவர் பதவிக்கு 'பேரம்'

Added : ஜன 08, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க.,கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தாலும்,அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் எதிர் தரப்பினர் 'டீலிங்' பேசுவதால் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 14 கவுன்சிலர்களில்,தி.மு.க.,7,கூட்டணி கட்சியான இ.கம்யூ.,1, மற்றும் அ.தி.மு.க.,5 ,அ.ம.மு.க.,1 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். தி.மு.க.,கூட்டணி பலம் 8 ஆக உள்ளது.அ.ம.மு.க.,கவுன்சிலரும் தி.மு.க.,வினரோடு சேர்ந்து வந்து கடந்த 2 ந் தேதி பதவியேற்றார். அவரின் ஆதரவு கிடைத்தால்தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர்.

இதற்கிடையே எதிர் தரப்பை சேர்ந்த சிலர் தி.மு.க.,கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு ஆதரவு தந்தால் சில லட்சங்களை தருவதாக கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிர்ந்த தி.மு.க.,தரப்பினர் கவுன்சிலர்களை பதவியேற்பு விழாவிற்கு வேனில் மொத்தமாக அழைத்து வந்துஅதே வேனில் பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க.,விற்குமெஜாரிட்டி இருந்தாலும் யார் தலைவர் பதவியை கைப்பற்றுவார்கள் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X