பொது செய்தி

தமிழ்நாடு

சுண்ணாம்பு உற்பத்திக்கு கைகொடுக்கும் கிரஷர்: ஆள் பற்றாக்குறை எதிரொலி

Added : ஜன 08, 2020
Advertisement
 சுண்ணாம்பு உற்பத்திக்கு கைகொடுக்கும் கிரஷர்: ஆள் பற்றாக்குறை எதிரொலி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆள் பற்றாக்குறையை சமாளிக்க, டிராக்டருடன் கூடிய கல் உடைக்கும் கிரஷர் பொருத்தி, சுண்ணாம்புக்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.தீபாவளி, பொங்கல் என்றாலே, வீடு, கோவில், பொது கட்டடங்கள் அனைத்தும் சுண்ணாம்பு பூசப்பட்டு, பளிச்சிடுவது வழக்கம். இதற்காக, கிராமங்களில் சுண்ணாம்புக் கற்கள் சூளைகளில் கொட்டி வேக வைக்கப்படும் தொழில் ஆங்காங்கே நடக்கும்.தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே சுண்ணாம்பு கற்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரயில்வே கேட், நெகமம் ரோட்டில் ராசக்காபாளையம், ஆண்டிபாளையம் மற்றும் பல்லடம் ரோட்டில் காட்டம்பட்டி பகுதிகளில் சுண்ணாம்பு கல் உற்பத்தி செய்யும் பாரம்பரிய தொழிலாளர்கள் உள்ளனர்.வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், சுண்ணாம்புக்கல் உற்பத்தி மையங்களில், பீகார், ஒடிசா மாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். சுண்ணாம்புக்கல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள செந்தில்குமார் கூறியதாவது:சில ஆண்டுகள் வரை வேகவைத்த சுண்ணாம்பு கற்களுக்கு பொங்கல், தீபாவளி மற்றும் கோவில் திருவிழா காலங்களில் கிராக்கி இருக்கும். விற்பனையும் விறுவிறுப்பாக நடக்கும்.தற்போது, கான்கிரீட் வீடுகளாக மாறியுள்ளதால், சுண்ணாம்புக்கு பதிலாக, சுவர்களுக்கு ரசாயன கலவையான ஒயிட் சிமென்ட், டிஸ்டம்பர் மற்றும் பெயின்ட்களை பயன்படுத்த துவங்கி விட்டனர்.இருப்பினும், வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, சுண்ணாம்பு தொழிலை கைவிட முடியவில்லை. கோழிப்பண்ணைகள், கிணறுகளின் சுற்றுச்சுவர் மற்றும் கால்நடை வளர்ப்பு இடங்களில் துாவுவதற்கு சுண்ணாம்புக்கல் தேவைப்படுவதால் அனுப்புகிறோம்.மேலும், சிமென்ட் செங்கல் தயாரிப்பில் சுண்ணாம்புக்கல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இத்தொழிலுக்கு, கல் உடைக்க ஆட்கள் கிடைக்காத காரணத்தால், ஜல்லி கல் உடைக்கும் பழைய கிரஷர்களை வாங்கி, மின்சாரத்திலும், மின் இணைப்பு இல்லாத இடங்களில் டிராக்டர்களை கொண்டும், ஓடக்கல் உடைத்து வருகிறோம். இந்த கற்களை நிலக்கரி துகள்களை பயன்படுத்தி வேக வைக்கிறோம்.வேக வைக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் தொழிலுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத நிலையிலும், சில தொழில் நிறுவனங்களை நம்பி இருப்பதால், வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X