பொது செய்தி

தமிழ்நாடு

ஓராண்டில் ரூ.39 லட்சம் அபராதம்

Added : ஜன 08, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்தாண்டு நடந்தப்பட்ட வாகன தணிக்கையில், ரூ.39 லட்சத்து, 81 ஆயிரத்து, 825 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் உட்பட, ஆறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன.இவற்றை கட்டுப்படுத்த, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்தாண்டு சோதனைகள் செய்யப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், அதிக பாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விதிமீறியதாக, 3,331 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன.இதில், தமிழகத்திற்கு முறையாக சாலை வரி செலுத்தாத வாகனங்களிடம் இருந்து, 19 லட்சத்து, 13 ஆயிரத்து, 15 ரூபாய் கட்டணமும், இதர விதிமீறலில் ஈடுபட்டதாக, 39 லட்சத்து, 81 ஆயிரத்து, 825 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.விதிமீறிய வெளி மாவட்ட வாகனங்களுக்கு, அந்தந்த ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் செலுத்தும் விதமாக, 26 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., சிவகுருநாதன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X