பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்நெறி வழிகாட்டி கல்லுாரியில் கருத்தரங்கம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தொழில்நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாளை, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கல்லுாரியில், தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கம் நடக்கிறது.இதில், அரசு வேலைவாய்ப்புகளை பெறுதல், போட்டித்தேர்வுக்கு தயாராவது, திறன் மேம்பாட்டு பயிற்சி, உயர் கல்வி, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள், சுய வேலைவாய்ப்பு, கடன் உதவிகள் உள்ளிட்டவை குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடக்கும்.ஒவ்வொரு துறையிலும் உள்ள சிறப்பு வல்லுனர்கள் பயிற்சியளிக்க உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற முன்வர வேண்டும் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X