பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா மாறுதலுக்கு லஞ்ச பேரம்: கிராம உதவியாளர் பணியிட மாற்றம்

Added : ஜன 08, 2020
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த பெரியபோது கிராமத்தில், பட்டா மாறுதலுக்கு கறாராக லஞ்சம் கேட்டு பேரம் பேசி சிக்கிய கிராம உதவியாளர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.பொள்ளாச்சி அடுத்த பெரியபோது கிராமத்தில், வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் காளிமுத்து. இவர், ஊராட்சி அலுவலகம் அருகில் நின்று, ஒருவரிடம் நத்தம் பட்டா மாறுதலுக்கு, லஞ்ச பேரம் பேசும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து, அவரை பணியிட மாற்றம் செய்து, 'சார்ஜ் ஷீட்' பதிவு செய்தனர்.காளிமுத்துவுடன் இணைந்து வருவாய்த்துறையில், வேறு எந்தெந்த அதிகாரிகள் 'கவனிப்பு' பெறுகின்றனர் என விசாரணை நடத்தவில்லை.அதிகாரிகள் முறையாக விசாரணை மேற்கொண்டு, ஆனைமலை தாலுகாவில் சான்றுக்கு, மக்களிடம் 'கவனிப்பு' பெறுவோரை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் கூறுகையில், ''காளிமுத்து, பெரியபோது பகுதியில் இருந்து, அர்த்தநாரிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது 'சார்ஜ் ஷீட்' போடப்பட்டு உள்ளது. இது குறித்த விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X