பொது செய்தி

தமிழ்நாடு

கேரள அதிகாரிகளுக்கு 'இ-நாம்' திட்ட பயிற்சி

Added : ஜன 08, 2020
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கேரள மாநில வேளாண்துறை அதிகாரிகளுக்கு, 'இ - நாம்' திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மத்திய அரசின், தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ - நாம்) திட்டம் மூலம், 'டிஜிட்டல்' முறையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இணைத்து, விளைபொருட்களின் ஏலம் மின்னணு முறையில் நடக்கிறது.இந்நிலையில், கேரள அரசு, 'இ - நாம்' திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக நேற்று, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கேரள மாநிலம் கோழிக்கோடு வேளாண் இணை இயக்குனர் செலிமா, உதவிச்செயலாளர் முகமது நிஷார் ஆகியோர் பயிற்சி பெற்றனர். விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம், பொள்ளாச்சி விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.கேரள மாநில வேளாண் இணை இயக்குனர் செலிமா கூறியதாவது:கேரள மாநிலத்தில், தமிழகத்தைப்போல அரசு விற்பனைகூடங்கள் உள்ளன. காய்கறிகள், கொப்பரை, பாக்கு ஏலம் நடக்கிறது.ஆனால், கேரளாவில் இன்னும், மத்திய அரசின் 'இ - நாம்' திட்டம் துவங்கப்படாமல் உள்ளது.விரைவில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், 'இ - நாம்' திட்டம் மூலம் கொப்பரை, பாக்கு ஏலம் நடத்த அரசு முடிவெடுத்து உள்ளது. இதற்காக, சிறப்பான விற்பனைக்கூடங்களில் பயிற்சி பெற்று வருகிறோம்.முதற்கட்டமாக, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பயிற்சி பெறுகிறோம். செயலி பயன்பாடு, ஏலம் நடக்கும் முறை உள்ளிட்டவை குறித்து முழுமையாக பயிற்சி பெறுகிறோம். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X