பொது செய்தி

தமிழ்நாடு

வாழைப்பழங்கள் விலை ஏறுமுகம் 3 மாதத்திற்கு குறைய வாய்ப்பில்லை

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் வாழைப்பழங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக காணப்படுகிறது.

திருப்புவனம், கலியாந்துார், திருப்பாச்சேத்தி, மாரநாடு, கானுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்தது.கடந்த நான்கு வருடங்களாக போதிய மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் குறைந்ததாலும் வாழை சாகுபடி குறைந்து விட்டது. இதனால் வியாபாரிகள் மதுரை மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

நாட்டு வாழை, கற்பூர வாழை, ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட பழங்களின் விலை உயர்ந்து உள்ளது. 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டுவாழைப்பழம் தற்போது 8 ரூபாயாக உயர்ந்து விட்டது. 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வாழை தற்போது 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொது மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

வியாபாரிகள் கூறியதாவது: பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பழங்களின் விலை உயர்வது வழக்கம், ஐயப்பன் மற்றும் முருகன் கோயில்களுக்கு பலர் விரதமிருப்பதால் தேவை அதிகமாக காணப்படும்.மதுரை மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழங்கள் விற்பனைக்கு வரும். போதிய விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இனி ஏப்ரலில் தான் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X