பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: மீட்பதற்கு இல்லை நடவடிக்கை

Added : ஜன 08, 2020
Advertisement
 கூட்டுறவுத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: மீட்பதற்கு இல்லை நடவடிக்கை

வால்பாறை:வால்பாறை நகரில், கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான இடத்தில், அம்மா மருந்தகம், ரேஷன்கடை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.வால்பாறை தாலுகாவில், கோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி சார்பில், 17 இடங்களில் ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. பெரும்பாலான கடைகள் இடிந்து விழும் நிலையில், எவ்வித பராமரிப்பும் இல்லாத நிலையில் உள்ளது.வால்பாறை நகர் கோ - ஆப்ேரட்டிவ் காலனியில் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிக்கு சொந்தமான, 22 சென்ட் இடம் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை கடந்த பல ஆண்டுகளாக செயல்படுகிறது. சிந்தாமணிக்கு செந்தமான இடத்தில், சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். சுமார், ஐந்து சென்ட் அளவுக்கு சிந்தாமணிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி சார்பில், புதிய கட்டடம் கட்டுவதற்காக, அந்த இடத்தை கூட்டுறவு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.கோவை சிந்தாமணி கூட்டுறவு துறை தனி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், ''வால்பாறையில் சிந்தாமணிக்கு சொந்தமான இடத்தில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், உடனடியாக மீட்கப்படும். வருவாய்த்துறை சர்வேயர் மூலம் இடத்தை அளந்து, மீட்கப்படும்.போர்டு மீட்டிங்கில் பரிசீலித்து, கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படும். சிந்தாமணிக்கு சொந்தமான, 22 சென்ட் இடத்தில், அம்மா மருந்தகம், ரேஷன்கடை, மினி சூப்பர் மார்க்கெட் அமைக்கப்படும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X