தேவகோட்டை பள்ளி அருகே குப்பை துர்நாற்றத்தில் தவிக்கும் மாணவர்கள்

Added : ஜன 08, 2020
Advertisement
 தேவகோட்டை பள்ளி அருகே குப்பை துர்நாற்றத்தில் தவிக்கும்  மாணவர்கள்

தேவகோட்டை:தேவகோட்டை பள்ளிகள் அருகே குப்பை குவித்து வைக்கப்படுவதால் நோய் அபாயத்தில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

தேவகோட்டை நகரில் 27 வார்டுகள் உள்ளன. 45 திருமண மண்டபங்கள் உள்ளன. இங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை துாயமரியன்னை மேல்நிலைப்பள்ளி, 16வது தொகுதி நகராட்சி பள்ளி, முத்தாத்தாள் பள்ளி, ராமகிருஷ்ண நடுநிலைப்பள்ளி, நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட பள்ளிகள் அருகேயுள்ள சுவரைஒட்டி கொட்டப்படுகிறது. அந்த வீதிகளில் செல்ல முடியாத நிலையில் துர்நாற்றம்,நோய்களை உருவாக்கும் கொசு உற்பத்தியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் அடிக்கடி ஆய்விற்கு சென்றாலும் இதை பற்றி கவலைப் படுவதில்லை. முத்தாத்தாள் பள்ளி அருகே உள்ள வடிவேல் கூறியதாவது, பலமுறை நகராட்சியில் புகார் சொல்லிவிட்டோம். நகராட்சி ஊழியர்கள் மீண்டும் மீண்டும் குப்பையை கொட்டுகின்றனர்.ரோட்டில் நடக்க கூட இடமில்லாமல் குப்பை நிறைந்து காணப்படுகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இப்பகுதியில் குப்பை குவித்து வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X