நிழற்குடை அமைத்ததில் சர்ச்சை

Added : ஜன 08, 2020
Advertisement

பந்தலுார்:பந்தலுாரில் இருந்து, அத்திக்குன்னா செல்லும் சாலையில் கூவமூலா பகுதியில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு, காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் மற்றும் பிற நேரங்களில் ஆட்டோக்களில் மக்கள் பயணிக்கின்றனர்.வாகனங்கள் காத்திருக்கும் மக்கள் அமர ஏதுவாக, அங்குள்ள இளைஞர்கள் இணைந்து சாலையோரத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்தனர். அதனை எஸ்டேட் நிர்வாகம் அகற்றியது. அதனையடுத்து, பொதுமக்களின் புகாரின் பேரில் கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் நேரில் ஆய்வு செய்து, தற்காலிக நிழற்குடை அமைக்க அனுமதி அளிக்க, நகராட்சிக்கு பரிந்துரை செய்தார். மீண்டும் அங்கு நிழற்குடை அமைக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், எஸ்டேட் நிர்வாகம், தேவாலா போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் எஸ்டேட் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.போலீசார் கூறுகையில், 'ஆர்.டி.ஓ.,வின் வாய்மொழி உத்தரவை ஏற்று கொள்ள இயலாது. முறையான கடிதம் வழங்கி நில அளவை செய்து, அதன் பின்னர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை இரு தரப்பினரும் இந்த பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது,' என்றனர்.மீண்டும், கிராம நிர்வாக அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 'இரண்டு நாட்களில் நில அளவை செய்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. இதன் பின், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X