சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலசரக்கு கடைக்காரர் வீட்டில்15 பவுன், ரூ.35 ஆயிரம் கொள்ளை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே பலசரக்கு கடைக்காரர் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.35 ஆயிரம், வெளிநாட்டு கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே அண்ணாமலை நகரை சேர்ந்தவர் தங்கராஜ் 50 இவர் பலசரக்கு கடை வைத்து உள்ளார். புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் மகன்களை பார்ப்பதற்காக, குடும்பத்தாருடன் டிச.,31 ல் சென்றார்.

நேற்று காலை 5:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். மரக்கதவை கடப்பாறையால் நெம்பி உடைத்து, உள்ளே சென்ற கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 35 ஆயிரம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு கேமராக்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டில் இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ., பெரியகருப்பன் விசாரிக்கின்றனர்.

2020ம் ஆண்டின் முதல் கொள்ளை

மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பூட்டிய வீடுகளில் புகுந்து கொள்ளை, திருட்டு
சம்பவம் அதிகரித்து வருகின்றன. 'இ-பீட்' திட்டத்தை எஸ்.பி., ரோஹித்நாதன் கொண்டு
வந்தாலும், அத்திட்டப்படி உண்மையாக செயல்பட குற்றப்பிரிவு போலீசார் முன்வருவதில்லை.

இதனால், பூட்டிய வீடுகள், கடைகளில் திருட்டுக்கள் நடந்தாலும், போலீசில் புகார் அளிக்க யாரும் முன்வருவதில்லை. போலீஸ் கணக்குபடி சிவகங்கை பலசரக்குகடைக்காரர் வீட்டில் நடந்த கொள்ளை தான், இந்த ஆண்டின் முதல் கொள்ளை வழக்காகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X