பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோயை வரவழைக்கும் சாயம் கலந்த மிட்டாய்: உணவு பாதுகாப்பு துறை அதிரடி பறிமுதல்

Added : ஜன 08, 2020
Advertisement
 புற்றுநோயை வரவழைக்கும் சாயம் கலந்த மிட்டாய்: உணவு பாதுகாப்பு துறை அதிரடி பறிமுதல்

குன்னுார்:குன்னுார் பகுதிகளில் புற்றுநோயை வரவழைக்கும் சாயம் கலந்த மிட்டாய் உட்பட காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை உணவு பாதுகாப்பு ஆணையாளர் பீலா ராஜேஷ் உத்தரவின்படி, நீலகிரி மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோவிந்தராஜ் (குன்னுார்), சிவராஜ் (ஊட்டி), செந்தில்குமார் (கூடலுார்), உள்ளிட்ட குழுவினர், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்புறத்தில், 20 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட சாயம் கலந்த மிட்டாய், தேதி, கம்பெனி உள்ளிட்டவை பதியப்படாமல் காலாவதியான, துரித உணவு பாக்கெட்கள், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்கள், 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை குன்னுார் குப்பை குழியில் அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், உரிமம் இல்லாத, 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில், ''குழந்தைகளை கவர்வதற்காக, சிரஞ்ச், கன், ஸ்பிரே உள்ளிட்ட பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் நிரப்பி, சாயம் கலந்த மிட்டாய், ஜூஸ் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு, புற்று நோய், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். இதனை பறிமுதல் செய்த கடை உரிமையாளர்களுக்கு, முதல் முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 2, 3ம் கட்டமாக இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.தொடர்ந்து, மீண்டும் இதே நிலை தொடர்ந்தால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும். கலெக்டர் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப்படும். ஆய்வில், குன்னுாரில், 85 பேர் கடை லைெசன்ஸ் புதுப்பிக்காமல் உள்ளதும் தெரிய வந்தது. ஆண்டிற்கு 12 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற் கொள்வோர் 'லைெசன்ஸ்' புதுப்பிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X