பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் 'தினமலர்' மெகா வினாடி---வினா : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய மாணவ, மாணவியர்

Added : ஜன 08, 2020
Advertisement
 ஊட்டியில் 'தினமலர்' மெகா வினாடி---வினா : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய மாணவ, மாணவியர்

ஊட்டி:'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; அமெரிக்கா செல்' எனும், பள்ளி மாணவர்களுக்கான வினாடி--வினா போட்டி, ஊட்டியில் நடந்தது.'தினமலர்' பட்டம் இதழ், கடந்த ஆண்டு முதல், மாணவர்களின் பொது அறிவு திறனை வளர்க்கும் வகையில், மாநில அளவில், வினாடி-வினா போட்டியை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளி; ஊட்டி அருகே உள்ள துானேரி குருகுலம் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில், முதல் தகுதி தேர்வு போட்டை நடத்தியது. இவ்விரு பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான தலா, 100 மாணவர்களுக்கு, பொது அறிவு சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டதில், சிறப்பாக தேர்வு எழுதிய, தலா, 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, இரண்டாம் கட்ட வினாடி-வினா போட்டி நடந்தது.கிரசன்ட் கேசில் பள்ளிஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளியில் நடந்த போட்டியில், 'ஏ' அணியில், நேத்ரா (8ம் வகுப்பு) இனியா (6ம் வகுப்பு), 'பி' அணியில் கார்த்திக், தீக்சிதா (7ம் வகுப்பு) 'சி' அணியில், லோகேஷ் (9ம் வகுப்பு), ராகேஷ் (8ம் வகுப்பு).'டி' அணியில், ஆல்பியன் லுாயிஸ் (8ம் வகுப்பு), பிரதீப் சந்திரன் (9ம் வகுப்பு), 'இ' அணியில், தியோடர் ஜோனதன், சச்சின் (9ம் வகுப்பு), 'எப்' அணியில், கவுசிகா ஹரணி (8ம் வகுப்பு), அக் ஷா (7ம் வகுப்பு), 'ஜி' அணியில், ராகேஷ், மோனிகா (9ம் வகுப்பு), 'எச்' அணியில், வைஷ்ணவி (9ம் வகுப்பு) ஷெர்வின் (8ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர்.இதில், 'ஜி' அணியை சேர்ந்த ராகேஷ், மோனிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை ஜாய்ஸ், முதல்வர் ஆல்டிரிஜ், நிர்வாக அலுவலர் டிரூக், ஆசிரியைகள் அமுதமொழி, சுபாஷினி, பிரியா மற்றும் வசுமதி ஆகியோர் பங்கேற்றனர்.துானேரி குருகுலம் பள்ளிகுருகுலம் பள்ளியில், மூன்று சுற்றுகளில் நடந்த போட்டியில், 'ஏ' அணியில் - ரோஹித், தனுஷ் (9ம் வகுப்பு), 'பி' அணியில் பிரனேஷ், சக்தியா (8ம் வகுப்பு), 'சி' அணியில் சந்தோஷ் குமார், ஹர்னித்.(8ம் வகுப்பு), 'டி' அணியில், இந்து, ஹர்ஷிதா (7ம் வகுப்பு), 'இ' அணியில் பவிஷா (7ம் வகுப்பு) கீர்த்தனா (6ம் வகுப்பு), 'எப்' அணியில், அருந்ததி, யாஷினி.(6ம் வகுப்பு) 'ஜி' அணியில், சஞ்சனா, கனிஷா (6ம் வகுப்பு), 'எச்' அணியில், காவியா, ஆர்.கனிஷா (7ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர். இதில், 'சி' அணியை சேர்ந்த சந்தோஷ் குமார் ஹர்னித் ஆகியோர் அரை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றனர்.இதில், பள்ளி தாளாளர் அர்ஜுணன், தலைமை நிர்வாகி வாசுகி, துணைமுதல்வர் கணேஷ், ஆசிரியர்கள் ஷர்மிளா, சத்யா, வினியா மற்றும் சாரதா ஆகியோர் பங்கேற்றனர்.இவ்விரு பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X