பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை வளாகத்தில் தார் ரோடு: நிதி ஒதுக்க சிவகங்கை எம்.பி.,மறுப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் கல்லுாரி வளாகத்திற்குள் தார்ரோடு அமைக்க எம்.பி., நிதியை ஒதுக்க காங்., எம்.பி., கார்த்தி மறுத்து, சுகாதாரத்துறை மூலம் பணம் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.

இங்கு, மகப்பேறு, பொது சிகிச்சை, அறுவை சிகிச்சைக்காக தினமும் 1300 வெளி, 500 உள் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இம்மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 2012-- 2013 ல் திறக்கப்பட்டது. ஆண்டுக்கு 100 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இங்கு 500 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர்.

இக்கல்லுாரி வளாகத்தில் 2012 ல் தார் ரோடு போடப்பட்டது. அதற்கு பின் இந்த ரோட்டை புதுப்பிக்காமல் விட்டு விட்டனர்.மருத்துவமனை, கல்லுாரி வளாகத்தை சுற்றியுள்ள தார்ரோடு அனைத்தும் சேதமுற்று, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதில் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்குள் நோயாளிகளுக்கு சிரமமே. அந்தளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது.

கடந்த 7 ஆண்டாக புதுப்பிக்காமல் உள்ள தார் ரோட்டை எம்.பி., நிதியில் புதுப்பித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.நேற்று சிவகங்கை வந்த கார்த்தி எம்.பி.,யை, மருத்துவ கல்லுாரி டீன் ரத்தினவேல், கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள் சந்தித்தனர்.


நிதி ஒதுக்க மறுப்பு:

இதற்கு பதில் அளித்த எம்.பி., கார்த்தி, 6 சட்டசபை தொகுதிக்கும் எம்.பி.,நிதி ஒதுக்க வேண்டும். மொத்த நிதியையும் மருத்துவ கல்லுாரிக்கே ஒதுக்க முடியாது. இருப்பினும் எம்.பி., என்ற முறையில் மருத்துவமனை, கல்லுாரி வளாகத்திற்குள் தார்ரோடு அமைக்க மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் வலியுறுத்துகிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X