சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் உலாவிய மாடுகள் டூவீலரில் வந்தவர் பலி

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் ரோடுகளில் உலாவும் மாடுகளால் விபத்து நடந்து பலர் காயம் அடைந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் டூவீலரில் வந்தவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இரவு, பகல் எந்நேரமும் திருப்புத்துார் ரோட்டில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. குறிப்பாக இரவில் ரோட்டில் படுத்து கிடக்கின்றன. இரவில் வரும் வாகனங்கள் இருட்டில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் மோதி அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றன.

சில நாட்களுக்கு முன் இரவில் சிவகங்கை ரோட்டில் அரசு மருத்துவமனை அருகில் டூ வீலரில் வந்த திருப்புத்துார் சுப்பிரமணியன்55, என்பவர் ரோட்டில் குறுக்காக வந்த மாடு மீது மோதி காயமடைந்தார். மதுரை மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X