பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி: ரூ.17 ஆயிரம் மானியம்

Added : ஜன 08, 2020
Advertisement
 எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி: ரூ.17 ஆயிரம் மானியம்

மேட்டுப்பாளையம்:காரமடை வட்டாரத்தில் அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து மரப்பயிர்கள் சாகுபடி தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம், வேளாண் துறை சார்பில் வனக்கல்லுாரியில் நடந்தது.முகாமுக்கு வேளாண் உதவி இயக்குனர் சீனிராஜ் தலைமை வகித்து பேசியதாவது:விவசாயிகள் விவசாய பயிர்களை மட்டும் பயிர் செய்தால் மட்டும் போதாது. மரப்பயிர்களையும் பயிர் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.மரங்கள் வளர்ப்பதால் அதன் இலைகள், மண்ணுக்கு இயற்கை உரமாகும். மரங்கள் அதிகம் இருப்பதால், மழை பெறவும் வாய்ப்பு உள்ளது. நிழலாக இருப்பதால், மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகமால் தடுக்கப்படுகிறது. நன்கு வளர்ந்த மரங்களில் இருந்து அறுவடை செய்யும் விதைகளில் இருந்து எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் வித்து மரப்பயிர்களை வளர்க்க, தமிழக அரசு ஒரு ெஹக்ேடருக்கு, 17 ஆயிரம் மானியம் வழங்குகிறது.இவ்வாறு அவர் பேசினார்.பயிற்சி அளித்த வனக்கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேந்திரன் பேசுகையில், ''எண்ணெய் வித்து மரப்பயிர்கள் பயிர் செய்து, எட்டு ஆண்டுகளில் பலனுக்கு வந்து விடும். இதிலிருந்து தொடர்ச்சியாக காய்களை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். மரப்பயிர்கள் நட்டு மூன்று ஆண்டுகள் வரை ஊடு பயிர்களை விவசாயம் செய்யலாம். இதற்கு அதிகம் தண்ணீர் தேவையிருக்காது. அதனால் விவசாயிகள் எண்ணெய் வித்து மரப்பயிர்களை நடவு செய்ய முன் வரவேண்டும்,'' என்றார்.முகாமில், 50 விவசாயிகள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார மேலாளர் உமாமகேஸ்வரி, உதவி மேலாளர்கள் தினேஷ்குமார், தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X