காரைக்குடி அழகப்பா மாதிரிப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தாமதம்

Added : ஜன 08, 2020
Advertisement

சிவகங்கை:காரைக்குடி அழகப்பா மாதிரிப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் சம்பளம் வழங்க தாமதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

1951ல் அரசு அனுமதியுடன் வள்ளல் அழகப்ப செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி 1988ல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பள்ளியை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு அரசு வழங்கியதுடன் இப்பள்ளியை தனியார் பள்ளிகள் போல் நடத்தாமல் அரசுப்பள்ளியை போலவே நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது.

இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்குகிறது. இந்நிலையில் சில மாதங்களாக சம்பளம் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் தாமதிப்பதாக கூறி அப்பள்ளி ஆசிரியர்கள் சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து புகார் அளித்தனர்.

அதில் தங்களுக்கு தாமதம் இல்லாமல் உரிய தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தனர். அவர்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிந்துரைத்தார்.அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தனியார் பள்ளிகளை போல் இப்பள்ளிக்கான அனுமதியை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

தேர்தல் நேரம் என்பதால் அதற்கான ஆவணங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதை காரணம் காட்டி எங்களுக்கு சம்பளத்தை தாமதப்படுத்துகிறார்கள். கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த எட்டு ஆண்டுகளாக அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ளார்கள். அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் சம்பளம் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அங்கீகாரத்தை விரைவில் புதுப்பிக்க பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும், அப்போது தான் எந்த பிரச்னையும் இல்லாமல் சம்பளம் வழங்க முடியும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X