சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆனைகட்டியில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

Added : ஜன 08, 2020
Advertisement
 ஆனைகட்டியில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

பெ.நா.பாளையம்:ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் சரணாலய வளாகத்தில் ஒரே நாளில், எட்டு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.ஆனைகட்டியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்களை தடுக்க வனத்துறை சார்பில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் சந்தன மரங்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.இதுவரை, கிராமப் புறங்களில் நடந்து வந்த இச்சம்பவங்கள் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவை ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள, சலீம் அலி பறவைகள் சரணாலய வளாகத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சுமார், 54 ெஹக்ேடர் பரப்பில் உள்ள இம்மையம் கடந்த, 1990ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு பல்வேறு மரங்கள் வளர்க்கப்படுவதால், மரங்கள் அடர்ந்த பகுதியாக காட்சி அளிக்கிறது.இங்குள்ள சந்தன மரங்களை, நள்ளிரவு நேரத்தில் சிறிய ரக மரம் அறுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடத்தில், அறுத்து துண்டுகளாக்கி கடத்துகின்றனர். கோவை வனத்துறையினர் கூறுகையில், 'சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டதாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. வந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டா நிலத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டால், பாதிப்புக்குள்ளானவர்கள் போலீசாரிடம் புகார் செய்ய வேண்டும்' என்றனர்.தடாகம் போலீசார் கூறுகையில், 'சந்தன மர கடத்தலை தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும், தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.இரவு நேரத்தில் சலீம் அலி பறவைகள் சரணாலய வளாகத்தில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.நடவடிக்கை இல்லை!சலீம் அலி பறவைகள் சரணாலய நிர்வாகத்தினர் கூறுகையில், 'கடந்த ஜூலை, ஆக., மாதங்களில் இங்குள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. டிச., கடைசி வாரத்தில் ஒரே நாளில் எட்டு சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டுள்ளன. தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X