பொது செய்தி

தமிழ்நாடு

நெல் அறுவடை செய்து பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே செயிண்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், நாற்று நட்ட வயலில், நெல் அறுவடை செய்து பொங்கலை கொண்டாடினர்.பெரியநாயக்கன் பாளையம் மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகே செயல்படும் இப்பள்ளியில் பிளஸ்2 விவசாய பிரிவு உள்ளது. இம்மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள வயல்வெளியில், கடந்த செப்., 20ம் தேதி நாற்று நடும் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று, நெல் அறுவடை செய்தனர்.செயிண்ட் ஜான் பள்ளி தாளாளர் அரவிந்தன் மற்றும் முதல்வர் பாஸ்கர் ஆகியோர் கூறுகையில், ''கடந்த நான்கு மாதங் களாக பள்ளி மாணவர்கள், வயலில் நெல் வளரும் விதத்தை கண்டு பாடம் கற்றுக்கொண்டனர்.இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட நெற்கதிர்களை மாணவர்கள் தங்கள் கைகளால் அறுவடை செய்து மகிழ்ந்தனர்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X