சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவருக்கு கத்திக்குத்து இருவர் கைது

Added : ஜன 08, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:முன்விரோதம் காரணமாக டிரைவரை கத்தியால் குத்தியது தொடர்பாக, போலீசார் இருவரை கைது செய்தனர். மேலும் ஒரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.மேட்டுப் பாளையம் அடுத்த, குருந்தமலை அருகேவுள்ள மொக்கைமேடு பவானி நகரை சேர்ந்தவர் பாபு, 28; டிரைவர். இவருக்கும், மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த சிவகுமார், 35, என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்துள்ளது.கரட்டுமேட்டு பகுதியில் பாபுக்கும் சிவகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மனோகரன், 38, சேகர், 31, மற்றும் சிவகுமார் மூவரும், பாபுவை கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த பாபு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேட்டுப்பாளையம் போலீசார், சிவகுமார், மனோகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சேகரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X