சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபானம் விற்ற ஆறு பேர் கைது: தொடர் கண்காணிப்பே தீர்வு

Added : ஜன 08, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:சிறுமுகை போலீஸ் எல்லையில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக, ஆறு பேரை போலீசார் கைது செய்து 70க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.சிறுமுகை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 13க்கும் மேற்பட்ட இடங்களில், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதனால் அப்பாவி கூலி தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், மேற்படியை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்து வெளியானது. இதையடுத்து நேற்று சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், லிங்காபுரம் விஸ்வநாதன், 41, மூலத்துறை மணிகண்டன், 30, இலுப்பபாளையம் ரங்கராஜ், 61, சின்னக்கள்ளிபட்டி மாரிமுத்து, 50, இலுப்பநத்தம் ரங்கராஜ், 60, ஆலாங்கொம்பு சுப்ரமணி, 45, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 70க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், 'போலீசார் வெறும் கண்துடைப்புக்காக இத்துடன் நடவடிக்கையை முடித்துக்கொள்ளக் கூடாது. தொடர்ந்து அப்பகுதிகளை கண்காணித்து, விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஏழைக் குடும்பங்கள் வாழ்வு பெறும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X