சூலுார் கிட்டாம்பாளையம் டாப்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூலுார் கிட்டாம்பாளையம் 'டாப்'

Added : ஜன 08, 2020

சூலுார்:கிட்டாம்பாளையம் ஓட்டுச்சாவடியில் அதிகபட்சமாகவும், வெங்கிட்டாபுரத்தில் குறைந்தபட்சமாகவும் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.சூலுார் ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், 1 லட்சத்து, 619 வாக்காளர்கள் இருந்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, 143 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கடந்த, 30ம் தேதி நடந்த தேர்தலில், 37,846 ஆண்கள், 38,480 பெண்கள் என, 76,326 பேர் ஓட்டளித்தனர்.இதில், கிட்டாம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த, ஓட்டுச்சாவடி எண், 12ல் மொத்தம் இருந்த, 399 வாக்காளர்களில், 364 பேர் ஓட்டளித்தனர். இந்த பூத்தில் மட்டும் அதிகபட்சமாக, 91 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.சின்னியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கிட்டாபுரத்தில், ஓட்டுச்சாவடி எண், 78ல், மொத்தமுள்ள, 698 வாக்காளர்களில், 291 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். இந்த பூத்தில், குறைந்தபட்சமாக, 41 சதவீதம் பேர் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.இதேபோல், யூனியன் கவுன்சிலர் எட்டாவது வார்டில், முன்னாள் சேர்மன் மாதப்பூர் பாலு போட்டியிட்டார். இந்த வார்டில், 6,996 வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில், 5,761 பேர் ஓட்டளித்தனர். இங்கு அதிகபட்சமாக, 82.35 சதவீத ஓட்டுகள் பதிவாகின.யூனியன் கவுன்சிலர் 13வது வார்டில், குறைந்தபட்சமாக, 68.90 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தன. இங்குள்ள, 9,747 வாக்காளர்களில், 6,716 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X