பொது செய்தி

தமிழ்நாடு

மே.பாளையத்தில் ரூ.2.90 கோடி வாடகை பாக்கி: தீர்வு கிடைக்காமல் திணறும் நகராட்சி

Added : ஜன 08, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில், நகராட்சி கடை வியாபாரிகள், 2.90 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.மேட்டுப்பாளையத்தில், நகராட்சிக்கு சொந்தமாக, 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு, 75 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைத்து வந்தது. இக்கடைகளை ஏலம் எடுத்தவர்கள் உள்வாடகைக்கு விட்டு கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.கடந்த, 2015ம் ஆண்டு, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனராக இருந்த சரவணக்குமார், நகராட்சிக்கு வருவாயை உயர்த்த கடைகளின் வாடகையை உயர்த்த மன்றத்தில் தீர்மானம் வைத்தார். அப்போது இருந்த கவுன்சிலர்கள் வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.ஆனால், நகராட்சி அதிகாரிகள் வாடகை உயர்வு குறித்து விதிமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்தாமல், பல மடங்கு வாடகையை உயர்த்தினர்.வாடகை உயர்வுக்கு முன், மாத வாடகை, 2,500 முதல் 7,500 ரூபாய் வரை இருந்தது. புதிய வாடகையாக, குறைந்த பட்சம், அனைத்து வரிகளையும் உள்ளடக்கி, 11 ஆயிரத்து, 400 ரூபாயாகவும், அதிகபட்சமாக, 43 ஆயிரத்து, 500 ரூபாய் வரையும் உயர்த்தியுள்ளனர். இதனால் புதிதாக வாடகை உயர்வு மற்றும் ஏலம் விட்டதில் நகராட்சிக்கு ஆண்டுக்கு, 2.25 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்தது. இந்த வாடகையை கட்ட முடியாத, 75க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் தங்கள் கடைகளை நகராட்சியிடம் ஒப்படைத்தனர். பலர் இந்த வாடகைக்குஒத்துக்கொண்டு கடைகளை நடத்தி வருகின்றனர். புதிய வாடகையை எங்களால் செலுத்த முடியவில்லை அதனால், வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்யும்படி வியாபாரிகள், நகராட்சி கமிஷனர், முதல்வர், உள்ளாட்சி அமைச்சர், அரசு உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பினர்.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டாக பெரும்பாலான நகராட்சி கடை வியாபாரிகள், கடையின் வாடகையை செலுத்தாமல் உள்ளனர். இதனால், 2.90 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வசூலாகாமல் உள்ளது.அதிகாரிகள் கடும் முயற்சி!மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, ''நகராட்சி கடைகளின் வாடகை பாக்கி, 2.90 கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடை வாடகை பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரிகள் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். விரைவில் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X