சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோர மரங்கள் வெட்டி கடத்தல்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே சாலையின் ஓரத்தில் இருந்த, நிழல் தரும் மரங்களை சிலர் வெட்டி கடத்தி வருகின்றனர்.சிறுமுகையை அடுத்த வச்சினம்பாளையத்தில், சாலையின் ஓரத்தில் நிழல் தரும் மரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும், 10லிருந்து, 15 வயதுடையவை. மாலை நேரங்களில் நடைபயிற்சியில் ஈடுபடும் பலர், இம் மரங்களின் அடியில் நின்று ஓய்வு எடுப்பர்.தற்போது சிலர் இம்மரங்களை ஒவ்வொன்றாக வெட்டி கடத்தி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்கள் இருந்தன. இம்மரங்களில் நீர்க் காக்கைகள் அதிகம் உட்காருகின்றன. அவற்றின் எச்சத்தால் நாற்றம் அடிக்கிறது. அதனால் இம்மரங்களை வெட்டும்படி ஊர் பொது மக்கள் கையெழுத்து போட்டு சிறுமுகை பேரூராட்சியிடம் கொடுத்துள்ளோம்.'ஆனால், தற்போது மரம் வெட்டும் நபர்களிடம் மரத்தை வெட்டுவதற்கான அனுமதி கடிதம் இல்லை. பேரூராட்சி அதிகாரிகளும் உடன் இல்லை. அதிகாரிகளை கவனித்துவிட்டு மரங்களை வெட்டி கடத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்றனர்.பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லாவிடம் கேட்ட போது, ''இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என்றார்.தாசில்தார் சாந்தாமணியிடம் இதுகுறித்து கேட்க, மொபைல்போனில் தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X