தமிழ்நாடு

இதுவும் அவசியமே: சீராகுமா பராமரிப்பற்ற நீர் நிலைகள் ; முன்வருமா உள்ளாட்சி அமைப்புகள்

Added : ஜன 08, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள துார்ந்த நீர் நிலைகளை செம்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டனர்.மாவட்டம் முழுவதும் துார் வாரப்படாத
ஆக்கிரமிப்பு ஊரணிகள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகள் அதிகம் உள்ளன.நல்ல நிலையில் இருந்த நீர்நிலைகள் பராமரிப்பு இன்றி மழை நீர் சேகரிக்க முடியாத நிலையில்
உள்ளன. பராமரிப்பு என்ற பெயரில் சில நீர்நிலைகளை கடனுக்கு துார் வாரி கணக்கு காட்டி விட்டனர். பெரும்பாலான நீர்நிலைகள் சிதிலமடைந்து உள்ளன.

நீர்வரத்து வழிகள் அடைபட்டு மழை நீர் வர வழியில்லாமல் உள்ளன. ஒவ்வொருஊராட்சி யிலும் இதுபோன்ற நீர்நிலைகள் உள்ளன.புதியதாக பதவியேற்றுள்ள ஊராட்சி
தலைவர்கள் தங்களின் முதல் பணியாக நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும். ஊராட்சி
கட்டுப்பட்ட நீர்நிலைகளை கண்டறிந்து அவற்றில் மராமத்து பணி செய்து மழை நீர் சேகரிக்க வழி செய்யலாம். பல ஊராட்சி தலைவர்களின் தேர்தல் வாக்குறுதியாகவும் இதுவேஇருந்து உள்ளது.சொன்னது போல் நீர்நிலைகளை பாதுகாத்தல், மரங்களை வளர்த்தல் போன்ற வற்றை முக்கிய பணியாக எடுத்துஊராட்சிகளை முன்மாதிரியாக மாற்றி காட்டவேண்டும்.


இன்றைக்கு தண்ணீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம். அந்தந்த பகுதியில் உள்ள இருக்கிற கண்மாய்கள், ஊரணிகளை பராமரித்து அவற்றிற்கு மழை நீர் வர வழி செய்தாலே போதுமானது. தண்ணீர் பிரச்னையை சமாளித்து விடலாம். புதிய ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் இதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டும்.

-ராஜபாண்டி, எழுத்தாளர்,அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X