ராஜபாளையத்தில் பெண் கழுத்தறுத்து கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜபாளையத்தில் பெண் கழுத்தறுத்து கொலை

Added : ஜன 08, 2020
Share
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் பெண்ணை நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த கொலையாளி போலீசில் சரணடைந்தார்.ராஜபாளையம்எம்.ஆர் நகரை சேர்ந்த முருகன் மனைவி ராமலட்சுமி 35. இரு பிள்ளைகள் உள்ளனர். கணவர் கோவையில் பணி புரிகிறார். பிள்ளைகளுடன் ராஜபாளையத்தில் ராமலட்சுமி வசித்து வந்தார். நேற்று பகல் 3.10 மணிக்கு வீட்டில் இருந்த ராமலட்சுமியை இவரது உறவினரான முகில் வண்ணம் பிள்ளை தெரு

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் பெண்ணை நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த கொலையாளி போலீசில் சரணடைந்தார்.

ராஜபாளையம்எம்.ஆர் நகரை சேர்ந்த முருகன் மனைவி ராமலட்சுமி 35. இரு பிள்ளைகள்
உள்ளனர். கணவர் கோவையில் பணி புரிகிறார். பிள்ளைகளுடன் ராஜபாளையத்தில்
ராமலட்சுமி வசித்து வந்தார். நேற்று பகல் 3.10 மணிக்கு வீட்டில் இருந்த ராமலட்சுமியை
இவரது உறவினரான முகில் வண்ணம் பிள்ளை தெரு சண்முகம் 40, ரோட்டிற்கு இழுத்து வந்து சிறிய கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வர சண்முகம் தெற்கு போலீசில் சரணடைந்தார். தெற்கு இன்ஸ்பெக்டர் மாரியப்பன்விசாரணை மேற்கொண்டார்.இருவர் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது.மேலும் பணம்கேட்டு ராமலட்சுமி தொல்லை கொடுத்ததால்
இக்கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X