சிதைந்த ரோடால் தூசி; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை வரை பஜார் வீதி வரையிலான சிதைந்த ரோடால் துாசி , தேங்கும் கழிவால் ஏற்படும் சுகாதாரகேடு என ஸ்ரீவி., மக்கள் கடும் அவதியடைகின்றனர்.

இப்பகுதியில் அதிகளவில் வணிகநிறுவனங்கள், குடியிருப்பு , பள்ளி இருப்பதால் இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும். ஆனால் நடந்து , டூவீலர் ,ஆட்டோக்களில் செல்லும்போதும் பொதுமக்கள் படும்சிரமங்கள்ஏராளம்.சின்னக்கடைவீதி பாண்டியன் கிராமவங்கி வாசல் அருகே கழிவுநீர் வாறுகால் சிதைந்து , பெயர்ந்து , கழிவுகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம், சுகாதாரகேடு, கொசுத்தொல்லை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர்.

காமராஜர் சிலைப்பகுதியிலிருந்து சின்னகடை பஜார் வரை செல்லும்ரோடு பல மாதங்களாக சிதைந்து கிடக்கிறது. வாகனங்கள் செல்லும்போது அதிகளவில் துாசி பறக்கிறது. டூவீலர்கள் ஓட்டி வருபவர்கள் தடுமாறவேண்டியுள்ளது. ஆட்டோக்களில் செல்லும் கர்ப்பிணிகள் படும் சிரமம் அதிகம்.மதுரை ரோடு வளைவில் அரசியல்கட்சியினரின் ஆர்பாட்டத்தின்போது போலீஸ் வாகனங்களும் வளைவில் நிறுத்தபடுவதால் வாகனஓட்டிகளின் கண்பார்வை மறைக்கபட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பலமுறை அரசு தரப்பினரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் பல மாதங்களாக
இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்ன கடை பஜார் வீதியில் செல்லும் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேட்டையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மக்கள் மூக்கை
பொத்திகொண்டு தான் நடந்து செல்லவேண்டியுள்ளது.

-கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்துார்.


துாய்மை இந்தியா குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு மந்தநிலையில் இருக்கிறது. நகரில் முறையான கழிவுநீர் கட்டமைப்பு இருந்தும் தினமும் துாய்மைபணி நடக்காததால் பஜார் வீதிகளில் அசுத்தநிலை காணபடுகிறது. இங்கு துாய்மைப்பணி என்பது கேள்விக்குறியாகிறது.

-வன்னியராஜ்,ஸ்ரீவில்லிபுத்துார்.


பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசுபஸ் டிப்போ வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
ரோட்டின் இருபுறமும் இருந்த கழிவுநீர் வாறுகால்கள் அடைபட்டு கிடக்கிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கும்நிலை அதிகரித்து வருகிறது.
நகராட்சி நிர்வாகமும், போலீஸ் துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-வேதநாயகம், ஸ்ரீவில்லிபுத்துார்.
நகராட்சி திரு.வி.க.,பள்ளி மாணவர்கள் அதிகளவில் செல்லும் ரோடு பல மாதங்களாக குண்டும், குழியுமாக கிடக்கிறது. கனரக வாகனங்கள் சென்றால் துாசிக்கள் பறப்பது, டூவீலர்
ஓட்டுபவர்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கிறது. ரோட்டை விரைந்து சீரமைப்பது அவசியம்.

-குமார், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X