பொது செய்தி

இந்தியா

தொழிற்சங்கங்கள்'பந்த்' : தமிழகத்தில் பிசுபிசுப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் இன்று (ஜன.,08) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், தமிழகத்தில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் இன்று (ஜன.,08) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், தமிழகத்தில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.latest tamil newsமத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதால் குமரியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேனி வழியாக கேரளாவிற்கு செல்லும் பஸ்களும் குமுளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்ததால் புதுச்சேரியில் பெரும்பாலான பஸ்கள், டெம்போக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் பல தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த அளவிலான தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் - புதுச்சேரி இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsஇருப்பினும் தமிழகத்தில் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பஸ்கள் இயக்கப்படாவிட்டால் புகார் தெரிவிக்க தமிழக அரசின் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் தவிர மற்ற பகுதிகளில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


மத்திய அரசு எச்சரிக்கை :


தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் எனவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு இன்று எந்த வித விடுப்பும் அளிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
08-ஜன-202019:21:05 IST Report Abuse
Poongavoor Raghupathy Banks are in loss but they resort to strikes. This only shows that the opposition is only against Modi and not against CAA. Modi catching all looters of Public wealth is the result of these strikes. Our Indian should not fall in the hands of Looters and must support as earlier in the interest of our Nation as otherwise our Country will be fully looted.
Rate this:
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
08-ஜன-202017:31:14 IST Report Abuse
Prof. A.Venkateswaran. பெங்களூரு இன்று இயல்பாக இயங்கியது . வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை . ( மாலை மணி 5:30 மணி நிலவரம் ). வங்கியில் எனக்கு வலைத்தளம் மூலம் வரவேண்டிய பணம் வந்தது . நான் அனுப்பிய பணம் அனுப்பியவரைச் சென்றடைந்தது . ஜெய்ஹிந்த் .
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
08-ஜன-202016:49:44 IST Report Abuse
A.George Alphonse எல்லா மாநிலங்களிலும் இந்த தொழில் சங்கங்கள் பந்த் பிசுபுசுதான்.மக்கள் விழித்து கொண்டார்கள். இதுபோன்ற வேலை வெட்டி எல்லாதோரின் தேவையயற்ற நாடகங்களை நம்பி ஆறுதலும்,அனுதாபமும் ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X